9 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.5.61 கோடி மதிப்பீட்டில் 9 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

Update: 2024-11-19 17:31 GMT
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், பட்டணம் மற்றும் புதுப்பட்டி பேரூராட்சிகளில் இன்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ரூ. 5.61 கோடி மதிப்பீட்டில் 9 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், கூனவேலம்பட்டியில் ரூ.11.50 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி, குருக்கபுரம் ஊராட்சி, சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை முதல் ஏ.ஆர்.கார்டன் சாலையை ரூ.19.00 இலட்சம் மதிப்பீட்டில் சாலை பலப்படுத்தும் பணி மற்றும் ஏ.ஆர்.கார்டனில் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, சிங்களாந்தபுரம் ஊராட்சி, அம்மன் நகரில் ரூ.16.00 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, மோளப்பாளையம் ஊராட்சி, பழனியப்பனூரில் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி அமையம் கட்டும் பணி, இரா.புதுப்பட்டி பேரூராட்சி வார்டு எண்:13 மற்றும் 15-ல் தமிழ்நாடு நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி, ஆர்.பி.காட்டூர், அருந்ததியர் தெருவில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.16.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டும் பணி, களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, இரா.புதுப்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.27.50 இலட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி, பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் பை மற்றும் பள்ளிச்சீருடைகளை வழங்கி, பசுமை படையின் சார்பில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பட்டணம் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2.94 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.35.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி என மொத்தம் ரூ. 5.61 கோடி மதிப்பீட்டில் 9 புதிய திட்டப்பணிகளுக்குஅடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.இராமசுவாமி, இராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கே.பி.ஜெகநாதன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Similar News