9 அமைச்சர்களையும் தொகுதியைவிட்டு வெளியேற்ற வேண்டும்
9 அமைச்சர்களையும் தொகுதியைவிட்டு வெளியேற்ற வேண்டும் என பா.ம.க.வினர் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணி போட்டியிடுகிறார். அவர் இன்று(புதன்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த நிலையில், அக்கட்சியின் தேர்தல் பணி பொறுப்பாளரும், சமூக நீதி ஊடக பேரவையின் தலைவருமான வக்கீல் பாலு விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலரான தாசில்தார் யுவராஜியிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. போட்டியிடு கிறது.
இடைத்தேர்தல் பணியில் ஆளுங்கட்சியின ரின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. இடைத் தேர் தலை ஜனநாயக முறைப்படி நடத்த முடியாத சூழ்நிலையில் தி.மு.க. வின் செயல்பாடு அமைந் துள்ளது. 9 மூத்த அமைச்சர்களை களத்தில் இறக்கி பல் வேறு பகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர். தேர்தல் முடியும்வரை அவர்கள் தொகுதியில் தங்கி இருந்து தேர்தல் பணியாற்று வார்கள் என்று தி.மு.க.வின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.இவர்கள் அடுத்து வரும் 25 நாட்களுக்கு தொகு தியில் தங்கியிருந்து தேர்தல் பணியாற்றினால் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த முடியாத சூழல் ஏற்படும்.
அமைச்சர்கள் பிரசாரம் செய்ய கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. எங்கள் கேள்வி அமைச்சர்கள் தொகுதியில் முகாம் அலுவலகம் அமைத்து, அரசு அதிகாரி கள் படை பலத்துடன் தங்கி இருந்து வாக்காளர் களை சந்திப்பதும், தேர்தல் பணியாற்றுவதும் ஒரு நியாயமான தேர்தல் முறையாக இருக்குமா என்பது தான். எனவே 9 அமைச்சர்களையும் தொகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும். எக்காரணத் தைக் கொண்டும் தேர்தல் ஆணையம் அமைச் சர்கள் தங்கி பணியாற்றுவதை அனுமதிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறியுள்ளார். அப்போது மாவட்ட செயலாளர் சிவக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட அமைப்பு செயலாளர் பழனி வேல், நகர செயலாளர் சங்கர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.