தேர்தல் பணிக்கு 946 போலீசார் தேர்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக 946 காவல்துறையினர் கணினி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Update: 2024-04-18 10:11 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் லோக்சபா தேர்தலையொட்டி ஓட்டுச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ள காவல்துறை பணியாளர்களை கணினி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பணியை ராமநாதபுரம் லோக்சபா தொகுதி தேர்தல் பார்வையாளர் (காவல்) சத்ய வீர் கட்டாரா, கரூர் மற்றும் திருச்சி தொகுதி பார்வையாளர் (காவல்) அமித் குமார் விஸ்வகர்மா, புதுகை கலெக்டர் மெர்சி ரம்யா, எஸ்பி வந்திதா பாண்டே ஆகியோர் பார்வையிட்டனர். புதுகை மாவட்டத்தில் மொத்தம் 13 லட்சத்து 45 ஆயிரத்து 361 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். இவர்களுக்காக ஆயிரத்து 560 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் பாதுகாப்பு பணியில் 946 காவல்துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். நிகழ்ச்சியில் டிஆர்ஓவினர் செல்வி, சரவணன், ரம்யாதேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வெங் கடாஜலம், தாசில்தார் (தேர்தல்) சோனை கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.