காவலர்களை மிரட்டியதாக சிறைக் கைதி மீது வழக்குப்பதிவு.
காவலர்களை மிரட்டியதாக சிறைக் கைதி மீது வழக்குப்பதிவு.
By : King 24x7 Website
Update: 2023-12-15 05:46 GMT
கோவை: ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆசிப் முஸ்தஹீன் (30).இவர் ISIS ஆதரவாளர் என்பது தெரியவந்த நிலையில் ஈரோடு போலீசார் அவரை UAPA சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறை ஜெயிலர் சிவராஜன் கடந்த நவம்பர் மாதம் 27ம் தேதி ஆசிப் முஸ்தகின் அறையினை சோதனையிட்ட போது அவரது ஜீன்ஸ் பேன்ட் பாக்கெட்டில் இருந்த பேப்பரை கைபற்றியுள்ளார்.அதில் ISIS அமைப்பின் கொடியினை வரைந்து இருப்பது தெரியவந்த நிலையில் அதை கைபற்றி சிறை குறிப்பேடுகளில் இது குறித்து பதிவு செய்துள்ளார். நீதிமன்றத்திற்கு மனுக்களை எழுதுவதற்காக கொடுக்கப்பட்ட காகிதத்தில் பேனாவில் ISIS அமைப்பின் கொடிகளை வரைந்து இருப்பதும் இஸ்லாமிய அரசின் கொடி இந்த கொடியை வைத்திருப்பதில் தவறில்லை என ஆசிப் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று ஜெயிலர் சிவராஜன் சிறை வளாகத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது விரைவில் சிறையிலிருந்து வெளியேறுவேன் எனவும் அப்போது ISIS அமைப்பிற்காக ஜிஹாத் வேலையைத் தொடர்வேன் அப்போது நீங்களும் இருக்க மாட்டீர்கள்,சிறைச்சாலையும் இருக்காது என மிரட்டல் விடுத்தாக ஜெயிலர் சிவராஜன் கொடுத்த புகாரின் பேரில் ISIS ஆதரவாளர் ஆசிப் முஸ்தஹீன் மீது மீண்டும் UAPA சட்டம்,கொலை மிரட்டல்,அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.