சிம்மக்கல் மாணவிகளிடம் திறன் வளர்ப்பு குறித்து பேசிய சமூக ஆர்வலர்

சிம்மக்கலில்தங்களது தனித்திறமைகளை ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் ஆற்றலாக மேம்படுத்திட வேண்டும் என மாணவிகளுக்கு சமூக ஆர்வலர் கூறினார்.

Update: 2024-06-11 10:53 GMT

நிகழ்ச்சியில் பேசிய சமூக ஆர்வலர்

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் சிம்மக்கல் கஸ்தூரிபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி ஆண்டு முதல் நாள் தொடக்க நிகழ்ச்சியில் திறன் வளர்ப்பு குறித்து பேசினார். பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியை ரீட்டா வரவேற்றார்.

மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அறிவு ஆற்றல் அறம் என்ற தலைப்பில் பேசிய சமூக ஆர்வலர் வழிகாட்டி மணிகண்டன்: கல்வியை முழு கவனத்துடன் கற்கும் அதே வேளையில் பொது அறிவையும் நூலக புத்தகங்கள் மற்றும் நிகழ்வுகளை கவனிப்பதன் மூலமாக தெரிந்துகொள்ள வேண்டும். 

  தங்களது தனித்திறமைகளை ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் ஆற்றலாக மேம்படுத்திட வேண்டும். தூய்மை மற்றும் உதவும் மனப்பான்மை உள்ளிட்ட அறம் சார்ந்த பண்புகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News