சுடுமண்ணால் ஆன பெண்ணின் தலைப்பகுதி கண்டுபிடிப்பு

சுடுமண்ணால் ஆன பெண்ணின் தலைப்பகுதி கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Update: 2024-06-24 15:52 GMT

சுடுமண்ணால் ஆன பெண்ணின் தலைப்பகுதி கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


 வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் 3ம் கட்ட அகழாய்வு பணி கடந்த 18ம் தேதி முதல் துவங்கி நடைபெறுகிறது. முன்னதாக கண்ணாடி மணிகள் கல்மணிகள் மற்றும் பழங்கால செங்கற்கள் உள்ளிட்ட தொன்மையான பொருட்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் இன்று 30.7 மி. மீ உயரமும் 25.6 மி. மீ அகலம் கொண்ட சுடுமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பெண்ணின் தலைப்பகுதி ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் வலைதள பக்கம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடைபெற்ற இரண்டு கட்ட அகழாய்வில் 7914 தொல்லியல் பொருட்கள் கிடைக்கப்பெற்று அங்கு கண்ணாடி மணிகள் மற்றும் சங்கு வளையல் தொழிற்கூடம் இருந்ததற்கான அடையாளங்களும் வைப்பாற்றின் வழியே கடல் வழி வாணிபம் நடந்ததற்கான பல்வேறு சான்றுகளும் கிடைக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழாய்வு நடைபெறும் பகுதி தொன்மையான மனிதர்களின் வாழ்விடப் பகுதியாக இருக்கலாம் என தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News