இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள் - ஆட்சியர் ச.உமா தகவல்

இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள் - ஆட்சியர் ச.உமா தகவல்

Update: 2023-11-28 18:04 GMT

நாமக்கல் மாவட்டத்தில் இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள் - ஆட்சியர் ச.உமா தகவல்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு, முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவினைக் கருப்பொருளாகக் கொண்ட மாவட்ட / மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நடத்திட அரசு ஆணையிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட அளவிலான போட்டிகள் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் 03.12.2023, ஞாயிற்றுக்கிழமை அன்று நாமக்கல் மாவட்டத்தில் திருச்சி மெயின் ரோடு ஸ்பெக்டிரம் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெறுகிறது.

குரலிசை, நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டுவாத்யம், மாண்டலின், கிதார், சாக்சபோன், கிளாரினெட் போன்ற கருவி இசைப்பேட்டியிலும் பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம், தாளக்கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய இளைஞர்கள் பங்கு பெறலாம். மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில போட்டிக்கு அனுமதிக்கப்படுவர். மேலும் விவரம் வேண்டுவோர் சேலம் மண்டலக் கலை பண்பாட்டு மையம், கைப்பேசி எண். 99444-57244 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம். இவ்வாய்ப்பினை கலைத்திறன் மிக்க நாமக்கல் மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News