உத்தமதானபுரம் செல்லியம்மன் கோவிலில் பால்குடத் திருவிழா
உத்தமதானபுரம் செல்லியம்மன் கோவிலில் பால்குடத் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-16 11:32 GMT
பால்குட ஊர்வலம்
பாபநாசம் அருகே உத்தமதானபுரம் செல்லியம்மன் கருப்பையா கோவிலில் பால்குடம் காவடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அது சமயம் திரளான பக்தர்கள் பால்குடம், காவடி, அழகு காவடி, வேல் காவடி ஆகியவற்றுடன் சிவன் கோவில் இருந்து புறப்பட்டு உத்தமதானபுரம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை வந்து அடைந்தது பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்று தீபாரதனை நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர் இவ் விழா ஏற்ப்பாட்டினை நாட்டாண்மைகள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.