கீழ்வேளூர் அருகே தேர்தல் வாகனசோதனையில் ரூ 71,980 பறிமுதல்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே தேர்தல் வாகனசோதனையில் ரூ 71,980 பறிமுதல் ;
Update: 2024-03-31 18:28 GMT
பறிமுதல்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கீழ் வெண்மணி- இரிஞ்சியூர் சாலையில் உள்ள அய்யனார் கோவில் பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி தெய்வேந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர் அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி அவர் வைத்திருந்த பையில் சோதனை செய்தனர். அந்தப் பையில் ரூ. 71,980. பணம் இருந்தது தெரியவந்தது. பறக்கும் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட போது மோட்டார் சைக்கிளில் வந்தவர் கீழ்வேளூர் என்.எஸ்.மில் தெருவை சேர்ந்த சண்முகவேல் என்பதும், தெரியவந்தது. மேலும் அவரிடம் அதற்கு உரிய ஆவணங்கள் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.. பறிமுதல் செய்த பணத்தை லட்சத்தை கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரேணுகா தேவி, கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதாஸ் இடம் ஒப்படைத்தனர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் கீழ்வேளூர் சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.