திருவேங்கடம் பகுதியில் குளிர்வித்த சாரல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
திருவேங்கடம் பகுதியில் குளிர்வித்த சாரல் மழை யால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-06-18 13:24 GMT
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இதனால் குற்றால அருவிகளில் சீசன் தொடங்கியது இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வறுத்து தொடங்கியது இதில் அருவியில் மற்றும் சிறிதளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், தற்போது சங்கரன்கோவில் அருகில் உள்ள திருவேங்கடத்தில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த நிலையில் காலை முதல் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. திருவேங்கடம் பகுதியில் தற்போது சில்லென்று காற்று வீசி சாரல் மழையும் பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சுட சுட டீ மற்றும் பஜ்ஜி ஆகியவற்றை மக்கள் தேடத் தொடங்கினர். திடீரென்று சாலமலை சாரல் மழை பெய்ததால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.