தோவாளை மலரியல் ஆராய்ச்சி மைய வாளகத்தில்  கலெக்டர் நேரில் ஆய்வு 

தோவாளை மலரியல் ஆராய்ச்சி மைய வாளகத்தில்  கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2023-11-28 15:41 GMT
கலெக்டர் ஆய்வு
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலரியல் ஆராய்ச்சி மைய வளாகத்தினை மாவட்ட கலெக்டர் ஶ்ரீதர் இன்று (28.11.2023) நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர்  கூறுகையில்:-  கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மலர்வகைகள்,  பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டத்தை சேர்ந்த மலர்களையும் வளர்த்து பராமரிக்கும் வகையில் தமிழ்நாடு வேளாண் ஆராய்ச்சி மையம்  சார்பில் தோவாளை பகுதியில் மலரியல் ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டு, அந்த வளாகத்தில் பல்வேறு மலர் வகை தாவரங்களை வளர்த்து பராமரித்து வருகிறார்கள்.

குறிப்பாக இந்த வளாகத்தில்  தாமரை, லில்லி. வெட்சி, தும்பை, முல்லை, ஆம்பல், நங்கு, மரா, சேடல், வடவம், வளசு, அதிரல், பிரதிகம், தளவம்,  பிட்டி, பிரமளவ், பிண்டி,தெற்றி,அரளி, நன்நிடு உள்ளிட்ட  பல்வேறு வகையான தாவர வகைகளில் மலர்கள் பராமரிக்கப்பட்டு ஆராய்ச்சி மாணவர்களுக்க பெரிதும் உதவியாக உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்தார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News