ஏமப்பேர் குளம் அருகே கலையரங்கம் கட்டும் பணி தீவிரம்
ஏமப்பேர் குளம் அருகே கலையரங்கம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-08 16:25 GMT
கலையரங்கம் கட்டும் பணி
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான குளம், நகர்ப் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1.21 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டது.
படகு சவாரி வசதியுடன் கூடிய குளமாக புனரமைக்கப்பட்டுள்ள நிலையில், அருகில் பொழுதுபோக்கு பூங்கா, சிறுவர்கள் நீச்சல் குளம், நடைபாதை ஆகிய வசதிகள் அங்கு உருவாக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தயாராக உள்ளது.
இதன் அருகே, 30 லட்சம் ரூபாய் மதிப்பில் இத தற்போது, புதிதாக கலையரங்கம் கட்டும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் அரசு நிதியுடன், 10 லட்சம் ரூபாயை பொது மக்கள் பங்களிப்பாக நகர மன்ற தலைவர் வழங்கியுள்ளார்.