சாலை மையப்பகுதியில் தடுப்புகள் அமைக்கும் பணி

ஜிஎஸ்டி சாலை மையப்பகுதியில் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2024-06-27 05:15 GMT
சாலை மையப்பகுதியில் தடுப்புகள் அமைக்கும் பணி

கூடுவாஞ்சேரி, வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து, பொத்தேரி வரை உள்ள ஜி.எஸ்.டி., சாலை மையப்பகுதியில், அதிக அளவில் மரங்கள், செடிகள் உள்ளன. இப்பகுதியில், இரு மார்க்கத்திலும் விபத்து அபாயத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர். அவ்வாறு சாலையை கடக்கும் அப்பகுதிவாசிகள் மற்றும் பள்ளி மாணவர்கள், அவ்வப்போது சாலை மையத்தில் உள்ள மரங்களால் வாகனம் வருவது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர்.

தற்போது, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்டதிலிருந்து, ஜி.எஸ்.டி., சாலையில் அதிக அளவிலான வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே, சாலைகளை கடந்து செல்லும் போது ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, திறந்த நிலையில் உள்ள சாலை மையப்பகுதியில் தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த பணிகளுக்காக, சாலையின் மையப்பகுதியில் உள்ள தேவையற்ற மண் திட்டுகளை அகற்றி, தடுப்புகள் அமைக்கும் பணியை, நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News