உண்டியல் திருட்டில் ஊழியர்களுக்கு தொடர்பு

திருத்தணி முருகன் மலைக்கோவிலில் நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின் போது ஊழியர்கள் சிலர் அத்துமீறி பணம் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2024-07-04 04:51 GMT

 திருத்தணி முருகன் மலைக்கோவிலில் நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின் போது ஊழியர்கள் சிலர் அத்துமீறி பணம் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.  

திருத்தணி முருகன் மலைக்கோவிலில் நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கையை கோவில் ஊழியர்கள் பணம், தங்கம், வெள்ளி போன்றவை தனித்தனியாக பிரித்து எண்ணினர். அப்போது கோவில் பெண் ஊழியர்கள், வைஜெயந்தி, தேன்மொழி ஆகிய இருவரும், உண்டியல் பணம், 1 லட்சத்து 15 ஆயிரத்து 790 ரூபாய் திருடியதை கோவில் நிர்வாகம் கண்டுபிடித்து, பணத்தை பறிமுதல் செய்து திருத்தணி போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து, தேன்மொழி, வைஜெயந்தி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

அப்போது, பெண் ஊழியர்கள், போலீசாரிடம், 14 ஊழியர்கள் உண்டியல் பணம் திருடி வருகின்றனர் என தெரிவித்தனர். இது குறித்து திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தமிழ்மாறன் விசாரித்து வருகிறார். உண்டியல் பணம் திருடுவதை தடுக்க கோவில் நிர்வாகம் உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்உண்டியல் எண்ணும் இடத்திற்கு செல்லும் போதும், திரும்பி வரும் போதும் சோதனை செய்ய வேண்டும். கூடுதல் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags:    

Similar News