பங்குனி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்

பங்குனி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் அக்னி தீர்த்தத்தில் நீராடி, முன்னோர்களுக்கு திதி வழிபட்டனர்.;

Update: 2024-04-09 07:00 GMT

பங்குனி அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள்.. நீண்ட‌ வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமியை தரிசனம் செய்து சென்றனர், காசிக்கு இணையான புண்ணிய ஸ்தலமாகவும், தீர்த்தம் மூர்த்தி ஸ்தலம் என முப்பெருமைகளையும் உடைய ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவில் அமாவாசை நாட்களில் தங்களுடைய முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது ஐதீகமாக உள்ளது.

Advertisement

இந்நிலையில், இன்று பங்குனி அமாவாசையொட்டி தங்களுடைய முன்னோர்களுக்கு அதிகாலையில் அக்னி தீர்த்தம் கடற்கரையில் குவிந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் புரோகிதர் மூலமாக எள்ளு பிண்டம் வைத்து, திதி தர்ப்பணம் கொடுத்து அக்னி தீர்த்தம் கடலில் நீராடி வழிபட தொடங்கினர். அதன்பின் ராமநாதசுவாமி கோவிலுக்குள் இருக்கக்கூடிய 22 புனித தீர்த்தங்களிலும் நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி - பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டு முன்னோர்களுக்கு தங்களது கடமையை செய்தனர்.

Tags:    

Similar News