வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த மாவட்டக் கலெக்டர்
குடவாசல் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்டக் கலெக்டர் ஆய்வு செய்தார்.
Update: 2023-12-14 11:23 GMT
குடவாசல் அருகே ஆடிப்புலியூர் ஊராட்சியில் ரூபாய் 9.61 லட்சம் மதிப்பீட்டில் மேல தெருவில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலையினையும் ரூபாய் 10.47 லட்சம் மதிப்பீட்டில் பிடாரி குளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு பணிகள் மற்றும் தூர்வாரும் பணியினையும் ரூபாய் 2.55 லட்சம் மதிப்பீட்டில் மியாவாகி அமைக்கப்பட்டுள்ள இடத்தில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதையும் ரூ. 14.0 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தினையும் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார்.
பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் .ஆய்வின் போது குடவாசல் வட்டாட்சியர் தேவகி, குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.