மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

Update: 2023-11-30 07:51 GMT

வளர்ச்சி கண்காணிப்பு குழு கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கண்காணிப்பு குழு தலைவரும் ,எம்பியுமான எஸ் .எஸ்.பழனி மாணிக்கம் தலைமை தாங்கினார் . மேலும் இக்கூட்டத்தில் அவர், அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் அலுவலர்கள் முழு முனைப்புடன் செயல்பட வேண்டும் .மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பாடுகளை விரைவு படுத்த வேண்டும். மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாற்றுத் திறனாளி உள்ளிட்டவர்களுக்கு உரிய நலத்திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கிராமப் பணிகளில் குடிநீர் வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் திட்டங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News