திருப்பத்தூர் அருகே திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
திருப்பத்தூர் அருகே சுட்டெரிக்கும் வெயில் என்று கூட பாராமல் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றார்.
By : King 24X7 News (B)
Update: 2024-04-09 09:58 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே சுட்டெரிக்கும் வெயில் என்று கூட பாராமல் சூறவெளியாய் சுழன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றார் திருவண்ணாமலை நாடாளுமன்ற திமுக வேட்பாளர், அண்ணாதுரை திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விசமங்களம்,
குரும்பேரி, பேராம்பட்டு, உள்ளிட்ட பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில் என்று கூட பாராமல் திருவண்ணாமலை திமுக நாடாளுமன்ற வேட்பாளர் சி என்.அண்ணாரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டபோது பெண்கள் ஆரத்தி எடுத்து நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, மற்றும் தோழமை கட்சி விசிக,மண்டல செயலாளர் சுபாஸ்,மற்றும் கட்சி நிருவாகிகள் கலந்து கொண்டனர்