பெண்களுடன் ஆபாசமாக நடனமாடிய திமுக கவுன்சிலர்

திண்டுக்கல் அருகே கோவில் திருவிழாவில் திமுக கவுன்சிலர் ஒருவர் கரகாட்டம் ஆட வந்த பெண்களுடன் ஆபாசமான நடனம் ஆடியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-06-02 11:34 GMT

பெண்களுடன் ஆபாசமான நடனமாடிய திமுக கவுன்சிலர்

ஒட்டன்சத்திரம் பகுதி சிக்கமானநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட போட்டிக்காம்பட்டியின் மகா காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முதல்நாளில் கரகம் ஜோடித்தல் நிகச்சி நடைபெற்றது. இதற்காக பிரபலமான ஒரு குழுவின் கரகாட்ட நிகச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனைக் காண பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என அனைவரும் கூடி நின்றனர். அப்போது அங்கு வந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் SR பழனிச்சாமி. அனைவரையும் அதிர்ச்சி அடையும் வகையில் நடந்து கொண்டார்.

அவர் மது போதையில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில் கரகாட்ட பெண்களுடன் திடீரென நடனமாட தொடங்கினர் அவர்களை தொட்டு ஆபாசமான செய்கைகளுடன் நடனமாடியது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.இதனால் அதிர்ச்சியடைந்த அவ்வூர் பெண்கள் கிளம்பத் தொடங்கினர். தொடர்ந்து இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

Similar News