நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் கொண்டாட்டம் !!

நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் கொண்டாட்டப்பட்டது.

Update: 2024-10-15 12:12 GMT

நாமக்கல்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் திரு உருவப்படத்திற்கு மாணவர்கள் மாலை அணிவித்தனர். நாமக்கல் கீரம்பூரில் உள்ள தி.நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் இன்று காலை 9.00 மணியளவில் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவருடைய திரு. உருவபடத்திற்கு பள்ளியின் செயலாளர், பொருளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைவர்கள், வகுப்புத்தலைவர்கள், அனைவரும் பூக்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள். பள்ளியின் பொருளாளர் தேனருவி பேசுகையில் “மாணவர்கள் தலைவர்களின் வரலாற்றை படிக்கவேண்டும், அவர்களை வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு வாழ்வில் வளம் பெறவேண்டும். கற்கும் கல்வி நாட்டிற்கும் நாட்டுமக்களுக்கும் தொண்டு செய்யும் வகையில் அமைய வேண்டும், டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் கூறியதைப் போல நம்முடைய ஒவ்வொரு நாள் வாழ்க்கைப் பயணமும் லட்சியத்தை கனவாக இருக்கவேண்டும் என்று கூறி வாழ்த்தினார்கள்.” மாணவர்கள் தனி நபர் ஒழுக்கம், மற்றும் கல்வி வளர்ச்சி, நாட்டுப்பற்று குறித்து உறுதி மொழி எடுத்துக்கொண்டு நிறைவு செய்தனர்.

Tags:    

Similar News