திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினர் சார்பில் மனிதநேய வார நிறைவு விழா
பெரம்பலூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினர் சார்பில் மனிதநேய வார நிறைவு விழா, சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் பங்கேற்ப்பு..
Update: 2024-01-31 11:56 GMT
மக்களிடையே மனித நேயத்தை வளர்க்கும் வகையில், ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாத இறுதி வாரத்தை மனித நேய வாரமாக கடைபிடித்து வரும் நிலையில், ஜனவரி 30ம் தேதி மாலை. 6 மணி அளவில் பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள அரசு மாணவர்கள் விடுதியில், பெரம்பலூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினர் சார்பில் மனிதநேய வார நிறைவு விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய்பெரம்பலூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினர் சார்பில் மனிதநேய வார நிறைவு விழா, சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் பங்கேற்ப்பு. மக்களிடையே மனித நேயத்தை வளர்க்கும் வகையில், ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாத இறுதி வாரத்தை மனித நேய வாரமாக கடைபிடித்து வரும் நிலையில், ஜனவரி 30ம் தேதி மாலை. 6 மணி அளவில் பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள அரசு மாணவர்கள் விடுதியில், பெரம்பலூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினர் சார்பில் மனிதநேய வார நிறைவு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், பெரம்பலூர் சார் ஆட்சியர் கோகுல், முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மனித நேயம் குறித்து பேசினார், இதனை தொடர்ந்து, பள்ளி மாணவ மாணவிகளின் , பேச்சு கவிதை, நடனம், உள்ளிட்ட நிகழ்சிகள் நடைபெற்றது, தொடர்ந்து 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள், மேலும் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய பள்ளி தலைமை ஆசியர்களை பாரட்டி நினைவு பரிசு கேடயம் வழங்கப்பட்டன, மேலும் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும், கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் விஜயன், உள்ளிட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.