உசிலம்பட்டியில் போதைபொருள் விழிப்புணர்வு பேரணி

உசிலம்பட்டியில் போதைபொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-06-30 10:55 GMT

விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டவர்கள் 

தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, விழிப்புணர்வுகளை ஏற்படுத்த அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரக காவல்துறையினர் மற்றும் உசிலம்பட்டி ஆர்.சி.சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் இணைந்து போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி ஆர்.சி.சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 500-க்கும் அதிகமான மாணவியர்கள் கலந்து கொண்ட இந்த பேரணியை உசிலம்பட்டி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பொன்னுச்சாமி, கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

, தேனி ரோடு, மதுரை ரோடு, பேரையூர் ரோடு என உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவுற்ற இந்த பேரணியில் போதை பழக்கங்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News