எடப்பாடி புதிய பேருந்து நிலைய பணிகள் தீவிரம்

எடப்பாடி புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது

Update: 2023-10-20 02:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்... அப்போது எடப்பாடியில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணியை சேலத்தில் காணொளி காட்சியின் மூலம் தொடங்கி வைத்தார்.... அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை பணிகளை ஆகஸ்ட் 28ஆம் தேதி நகர மன்ற தலைவர் பாஷா துவக்கி வைத்து இந்த புதிய பஸ் நிலையம் 175 நாட்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்திருந்தனர் இந்த நிலையில் பூமி பூஜை போட்டு 50 நாட்கள் ஆகி தற்போது ஒரு வார காலமாக அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News