தேர்தல் விழிப்புணர்வு மிதிவண்டி பயணம்

மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு 6 தமிழ் ஆசிரியர்கள் மாவட்டம் முழுவதும் செல்லும் தேர்தல் விழிப்புணர்வு மிதிவண்டி பயணத்தினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

Update: 2024-04-15 10:30 GMT
தேர்தல் விழிப்புணர்வு மிதிவண்டி பயணத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு, என் வாக்கு விற்பனைக்கு அல்ல மற்றும் 100% வாக்குபதிவை வலியுறுத்தியும், 6 தமிழ் ஆசிரியர்கள் மாவட்டம் முழுவதும் செல்லும் தேர்தல் விழிப்புணர்வு மிதிவண்டி பயணத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டத்தில் மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு வாக்காளர்களிடையே தவறாமல் வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துக் கூறும் வகையிலும், பணம் பரிசுப் பொருட்கள் பெற்று வாக்களிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக ஆறு தமிழ் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாவட்டம் முழுவதும் சுமார் 230 கிலோமீட்டர் மிதிவண்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேர்தல் விழிப்புணர்வு மிதிவண்டி பயணம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மிதிவண்டி தேர்தல் விழிப்புணர்வு பயணத்தின் முதல் நாளில் விருதுநகர், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கும், இரண்டாம் நாளில் அருப்புக்கோட்டையில் இருந்து சாத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி ஆகிய பகுதிகளுக்கும் மூன்றாம் நாளில் சிவகாசியில் இருந்து திருவில்லிபுத்தூர், இராஜபாளையம் ஜவஹர் மைதானம் வரை மாவட்டம் முழுவதும் 230 கிமீ சுற்றுப்பயணம் மேற்கொண்டு என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100 சதவிகிதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.

Tags:    

Similar News