வேடசந்தூரில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்
வேடசந்தூரில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-08 12:37 GMT
கோப்பு படம்
வேடசந்துார் மின்வாரிய அலுவலகத்திற்கு செல்லும் வழியை நாடார் உறவின் முறையினர் பட்டா உள்ளதாக கூறி கல்நட்டு கம்பி வேலி போட முயற்சி செய்தனர். இதை மின்வாரிய ஊழியர்கள் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேடசந்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த நிலையில் மின் அலுவலகம் செல்லும் வழி நாடார் உறவின்முறைக்கு சொந்தமானதாக கூறி கல் நட்டனர். கம்பி வேலி அமைக்க முயன்றபோது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் மின்வாரிய அதிகாரிகளிடம் உங்களுக்கான ஆதாரங்களையும் கொண்டு வாருங்கள் என கூறி அனுப்பி வைத்தனர்.