அரசாணை எண் 243 ஐ ரத்து செய்ய வலியுறுத்தி தொடக்கல்வி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்
ஈரோட்டில் அரசாணை எண் 243 ஜ ரத்து செய்ய வலியுறுத்தி தொடக்கல்வி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
தொடக்கக் கல்வித் துறையில் தமிழக அரசு புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள அரசாணை 243 ஆன மாநில பதிவு மூப்பு முன்னுரிமை ரத்து செய்ய வேண்டும் , தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கனின் கூட்டு நடவடிக்கை குழுவிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் வாய் மொழியாக ஏற்றுக் கொண்ட EMIS உள்ளிட்ட 12 கோரிக்கைகளை தொடர்பாக எழுத்துப்பூர்வமாக ஆணை உடனடியாக வெளியிட வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக ஈரோட்டில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது
சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து இந்த உண்ணாவிரப் போராட்டத்தில் அரசாணை எண் 243 உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.மேலும் தமிழக அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் வருகிற பிப்ரவரி 19 முதல் 21 வரை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மூலம் தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தனர் ..