கச்சபேஸ்வரர் கோவிலில் யானை சிலைகள் அமைப்பு

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் நுழைவாயிலில் இரு யானை கற்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.;

Update: 2024-01-25 06:06 GMT

யானை கற்சிலைகள் 

காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் பிப்., 1ல் நடக்கிறது. இதையொட்டி கோவிலில், ராஜகோபுரம் மற்றும் பிற கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டு திருப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கோவில் நுழைவாயிலில், அமைப்பதற்காக, ஒவ்வொன்றும், 15 டன் எடையில், இரண்டு யானை கற்சிலைகள் அமைக்க, சங்கராபுரத்தைச் சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியன் தலைமையிலான சிற்பிகள் இரு யானை கற்சிலைகளை செதுக்கினர். நேற்று காலை, பல்வேறு பூஜைகளுக்குப் பின் இரு யானை சிலைகளும் கோவில் நுழைவாயில் பகுதியில் நிறுவப்பட்டது.
Tags:    

Similar News