புனித வெள்ளி : சங்குமால் கடற்கரையில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி

புனித வெள்ளியை ஒட்டி ராமேஸ்வரத்தை அடுத்த சங்குமால் கடற்கரையில் இருந்து ஒலைக்குடா கிராமத்திற்கு சிலுவைப்பாதை செல்லும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் ஏராளமான மீனவமக்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-03-29 06:33 GMT

 புனித வெள்ளி என்பது உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களாலும் அனுசரிக்கப்படும் நாளாகும். இந்த நாளை பெரியவெள்ளி என்றும் அழைக்கின்றனர். இந்த புனித வெள்ளியில் இயேசு கிறிஸ்து பட்ட துன்பத்தையும், அவர் மரிதத்தையும் நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வத்தை அடுத்த ஒலைக்குடா பகுதியில் ஆண்டுதோறும் புனிதவெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்ச்சியாது நடைபெறுவது வழக்கம்

. இதையடுத்து, சங்குமால் கடற்கரையிலிருந்து இயேசுபிரான் மற்றும் யூதர்கள் போன்று வேடமணிந்தவர்கள் சிலுவையை இயேசுவின் மீது தூக்கி வைத்து சுமந்து செல்வது போன்றும், யூதர்கள் இயேசுவை சாட்டையால் அடித்து துன்புறுத்தும் போன்றும் நடித்து இயேசுவின் பிறப்பு, இறப்புகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக சிலுவைப்பாதை நிகழ்ச்சியாது நடைபெற்றது. சங்குமால் கடற்கரையில் இருந்து ஓலைகுடா கிராமத்திற்கு ஊர்வலமாக சென்று அங்குள்ள தேவாலயத்தில் சிலுவைபாதை சென்று சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த சிலுவை பாதை நிகழ்ச்சியில் ஏராளமான மீனவமக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News