ரூ.119 கோடி மதிப்பில் மருத்துவமனை கட்டிடங்கள் - மா.சுப்பிரமணியம்

மருத்துவதுறை வரலாற்றிலேயே தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.119 கோடி மதிப்பில் மருத்துவமனை கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைகள் மேம்பாட்டு வசதிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

Update: 2024-01-08 06:49 GMT

அமைச்சர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் புதியதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடங்களை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்வு செய்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவமனை சேவைகள், குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியதாவது, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்து வருகிறோம், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளின் வருகை 2000 ஆயிரத்திற்க்கும் மேல் உள்ளது.. ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பின்னர் நோயாளிகளிடம் விசாரித்த போது, மருத்துவமனை சேவை மிகசிறப்பாக இருப்பதாக பொதுமக்கள் கூறினர். திருப்பத்தூர் மாவட்டத்தை புதிய மாவட்டமாக அறிவித்த சூழலில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தமிழக முதல்வரால் மேம்படுத்தப்பட்டு ஏறத்தாழ 60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிட பணிகள் நடைப்பெற்று கொண்டிருக்கின்றது.. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு அதற்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது.. ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதி ஏற்படுத்தி தருவதற்க்கும், அதிகபட்சமான மருத்துவ வசதிகளை மேம்படுத்த வசதியாக 24 கோடியே 31 லட்சம் மதிப்பில் தரைத்தளத்துடன் கூடிய 6 மாடி கட்டிடம் கட்டும் பணி நடைப்பெற்று வருகிறது.

இன்னும் 10 மாதங்களில் ஆம்பூர் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம் பொதுப்பணித்துறையினர் மூலம் கட்டி முடிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்படும் மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில், உள்ள பல்வேறு கிராமங்கள் மற்றும் நகர் பகுதியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் தீவிர சிகிச்சை மையம், துணை சுகாதார நிலையம், கட்டும் பணி நடைப்பெற்று வருகிறது மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் 119 கோடியே 26 லட்சம் மதிப்பில் பல்வேறு கட்டுமான பணிகள் நடைப்பெற்று வருகிறது. மருத்துவதுறை வரலாற்றிலேயே வேறு எப்போதும் இல்லாத அளவிற்கு மருத்துவ கட்டிடங்கள் கட்டும் பணி, மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும் பணிகள் இந்த மாவட்டத்தில் நடைப்பெற்று வருகிறது. மேலும் ஆம்பூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தேவையான வசதிகளை தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் கூறி மத்திய அரசின் மூலம் பெற்றுதரப்படும் என கூறினார்.. மேலும் இந்த ஆய்வில் திருப்பத்தூர் மாவட்ட வருவாய் ஆய்வாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவதுறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்..

Tags:    

Similar News