வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் நாட்டுக்காக அர்ப்பணிப்பேன் - மோடி

விவேகானந்தர் மண்டப பார்வையாளர் புத்தகத்தில் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் நாட்டுக்காக அர்ப்பணிப்பேன் என பிரதமர் மோடி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

Update: 2024-06-03 05:14 GMT

பிரதமர் மோடி

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாட்கள் தியானம் முடித்து புறப்பட்ட பிரதமர் மோடி, விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில் தனது கருத்தை பதிவு செய்தார். அந்த பதிவில், -       இந்தியாவின் கடைசி முனையான கன்னியாகுமரியில் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதமான உணர்வை அனுபவித்து வருகிறேன். பார்வதியும், சுவாமி விவேகானந்தரும் இந்த பாறையில் தியானம் செய்திருந்தனர். பின்னர் ஏக்நாத் ரானடே அவர்கள் இந்த கல் நினைவகத்தை அமைத்து விவேகானந்தரின் எண்ணங்களுக்கு உயிர் கொடுத்தார்.      ஆன்மீக வளர்ச்சியின் முன்னோடியான சுவாமி விவேகானந்தர் எனது லட்சியமாகவும், எனது ஆற்றலின் மூலமாகவும், எனது ஆன்மிக பயிற்சி யாகவும் இருந்துள்ளார்.

சுவாமிஜியின் கனவுகள், மதிப்புகள் மற்றும் லட்சியங்களை பின்பற்றி வடிவம் பெறுவது எனது அதிர்ஷ்டம். இந்த பாறை நினைவு சின்னத்தில் நான் இருக்கும் இந்த நாட்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகும், எனது வாழ்வின் ஒவ்வொரு கணமும் என் உடலில் ஒவ்வொரு துகளும் தேச சேவைக்காக அர்ப்பணிக்கப்படும் என்ற எனது உறுதியை பாரத அன்னையின் காலடியில் அமர்ந்து இன்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்.      தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் நாட்டு மக்களின் நலனுக்காகவும் பாரதத்திற்காகவும் நமது மரியாதையை செலுத்து கிறோம் என்று அவர் கருத்து பதிவிட்டுள்ளார்.      

இதுபோன்று திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின்னர் மோடி அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் எழுதியிருப்பதாவது:-        மிகப்பெரிய புனிதரான திருவள்ளுவரின் சிலை முன்னால்  நிற்பது ஒரு சிறந்த அனுபவத்தை கொடுப்பதாக அமைந்திருந்தது. அவர் இலக்கியம் மற்றும் தத்துவ களங்களில் தலை சிறந்த மேதையாக விளங்கினார். வாழ்க்கை, .சமூக கடமை மற்றும் நீதிநெறி குறித்து திருவள்ளுவர் திருக்குறளில்  தரும் ஆழமான கருத்துக்கள் உலகளாவிய மக்களின் மனங்களை வென்றதாக அமைந்துள்ளன.

சர்வதேச மற்றும் தேசிய அளவில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போதெல்லாம் நான் திருக்குறள்களை எடுத்துக் கூறும் வாய்ப்பு பெற்று இருக்கிறேன்.   திருக்குறளின் பல்வேறு மொழிபெயர்ப்புகளை நான் வெளியிட்டு இருக்கிறேன். வளர்ச்சி பெற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நமது குறிக்கோளுக்கு திருக்குறள் தான் ஊக்கமாக அமைந்தது.   உலகளாவிய பிரச்சினைகளுக்கான தெளிவான தீர்வை வழங்குவதில் பெரிதாக பங்காற்றுவதற்கு இந்தியாவையே இன்று உலக எதிர்நோக்கி உள்ளது. இந்த சூழ்நிலையில் திருவள்ளுவரின் எக்காலத்திற்கும் உலக அளவில் பொருந்தும் அறிவுரைகள், அமைதி, வளர்ச்சி மற்றும் வளத்துடன் கூடிய உலகளாவிய இயக்கத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags:    

Similar News