மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கொடுமுடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா இயல்பு தணிக்கை மேற்கொண்டு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் தன்பதிவேடு, முன்கொணர் தன்பதிவேடு, பட்டா, இ-பட்டா, முதியோர் உதவித்தொகை, வழக்கு பதிவேடு, நீண்ட கால நிலுவையில் உள்ள அலுவலக கோப்புகள் உள்ளிட்ட முக்கிய அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்து கேட்டறிந்து அதற்கு உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஈரோடு திண்டல்மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு மேற்கொண்டார்.
அங்கு விவசாய பயிர்கடன் , நடைமுறை மூலதனக் கடன், மகளீர் சுய உதவிக்குழுக் கடன், நகைக் கடன், இதரக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதையும் மற்றும் அவை தொடர்புடைய கோப்புகளையும் பார்வையிட்டு, உரிய அரிவுரைகளை வழங்கினார்.