மாயூரநாத சுவாமி கோயிலுக்கு அபயாம்பிகை யானை வந்து 51 வருஷமாகுது !
மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோயில் யானை அபயாம்பிகை வருகை புரிந்து 51 ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு விழா கொண்டாடப்பட்டது.
Update: 2024-01-08 10:19 GMT
மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகை. கடந்த அரை நூற்றாண்டாக மாயூரநாதர் கோயிலில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் முன்னதாக யானை அபயாம்பாள் செல்ல விழா நடக்கும். யானை அபயாம்பாள் கோயிலுக்கு வந்து 51 ஆண்டுகள் இன்றுடன் நிறைவுற்றதை தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் யானைக்கு 51வது ஆண்டுவிழா நடத்தப்பட்டது. இன்று காலை யானைக்கு கலசபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், இரவு பன்னிரு திருமுறைகளை யானை மீது வைத்து தேவார இன்னிசை கச்சேரியோடு திருவீதியுலா நடைபெற்றது.