கீரங்குடி ஐயனார் ஆலய 72 ஆம் ஆண்டு திருவிழா
கீரங்குடி ஐயனார் ஆலய 72 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பெரிய நாயகி அம்மன் வேடமணிந்து நடனமாடிய கலைஞர்களை கண்டு ரசித்தனர்.
நாகை அருகே கீரங்குடி ஐயனார் ஆலய 72 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பெரிய நாயகி அம்மன் வேடமணிந்து தத்ரூபமாக நடன கலைஞர் ஆடிய நிகழ்வு பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைத்தது. நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த கீரங்குடி கிராமத்தில் ஸ பூர்ண புஷ்களாம்பிகா உடனுறை அய்யனார் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலின் 72 ஆம் ஆண்டு, திருவிழா கடந்த ஜூன் 16 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கி பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு சிறப்பு அபிஷேக ஆராதனையும் அதனை தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து இரவு குதிரை வாகனத்தில் அம்பாளுடன் அய்யனார் எழுந்தருள வீதியுலா காட்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிகரம் கலைக்குழுவினரின் தப்பாட்ட நிகழ்ச்சியும், அப்போது நடன கலைஞர் ஒருவர் பெரியநாயகி அம்மன் போல வேடமணிந்து தத்ரூபமாக நடனமாடியது பார்வையாளர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. மெய்சிலிர்க்கும் வகையில் இருந்த நடனத்தை பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும், மனம் உருகி கண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் பின்னர் சுவாமி வீதியுலா புறப்படும் நடைபெற்றது இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர்.