குமரியில் கவுன்சிலரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தவர் கைது 

குமரியில் கவுன்சிலரின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-05-10 13:42 GMT
கைது (பைல் படம் )

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பெரிய விளையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் சந்திரமோகன் (45). இவர் கொட்டாரம் பேரூராட்சி 4-ம் வார்டு காங்கிரஸ் கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் கடந்த 30ஆம் தேதி மாலை 3 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு வெளியே சென்றார்.

பின்னர் சிறுநேரம் கழிந்து வீடு திரும்பியவர் வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.      இது குறித்து கிறிஸ்டோபர் சந்திரமோகன் கன்னியாகுமரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.    

விசாரணையில் பூஜை புரைவிளையை சேர்ந்த ஹரிஹரன் (30)என்பவர் தீ வைத்து எரித்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். இவர் ஏற்கனவே காங்கிரஸ் கவுன்சிலர் வீட்டு தெருவில் வசித்து வந்த போது தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்ததாகவும் அதன் காரணமாக சம்பவத்தன்றுவர் கவுன்சிலர் வீட்டுக்கு சென்று அவரது தாயாரிடம் பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது.      

இது தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஹரிகரனை போலீசார் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News