கல்குவாரி குளத்தில் குளிக்க சிக்கிய நபர் நீரில் மூழ்கி பலி!
திருமயம் அருகே உள்ள பில்லமங்கலத்தை சேர்ந்தவர் அழகப்பன் மகன் மணிகண்டன் (26). இவர் நேற்று உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு காட்டுபாவா பள்ளிவாசல் அருகே உள்ள கல்குவாரி குளத்தில் குளிக்க சென்றார்.;
By : King 24x7 Angel
Update: 2024-07-12 10:55 GMT
பலி
திருமயம் அருகே உள்ள பில்லமங்கலத்தை சேர்ந்தவர் அழகப்பன் மகன் மணிகண்டன் (26). இவர் நேற்று உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு காட்டுபாவா பள்ளிவாசல் அருகே உள்ள கல்குவாரி குளத்தில் குளிக்க சென்றார். அப்போது பாறை இடுக்கில் சிக்கிய அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்ததும் திருமயம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜராஜ சோழன் தலைமையிலான மீட்பு படையினர் விரைந்து வந்து மணிகண்டன் உடலை மீட்டனர். இதுதொடர்பாக திருமயம் போலீசார் விசா ரணை மேற்கொண்டுள்ளனர்.