மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க நடவடிக்கை.....
பள்ளியில் 'மாணவர் மனசு' பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும் என்று கூறப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-04 08:59 GMT
பள்ளிக்கல்வி
திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் 'மாணவர் மனசு' பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal இல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.