தஞ்சாவூரில் மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

திட்டப்பணியாளர் மீதான வன்கொடுமை தாக்குதலைக் கண்டித்து, தஞ்சாவூர் மாவட்ட மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-01-08 11:16 GMT

 திட்டப்பணியாளர் மீதான வன்கொடுமை தாக்குதலைக் கண்டித்து, தஞ்சாவூர் மாவட்ட மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  

மதுரை மாவட்டம், மேலூர் அருகே சேக்கிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் பணியாற்றி வரும் தன்னார்வலர் தனலட்சுமி மற்றும் அவரது கணவர் மீது கடந்த ஜனவரி 4ஆம் தேதி நடைபெற்ற வன்கொடுமை தாக்குதலைக் கண்டித்து, தஞ்சாவூர் மாவட்ட மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சாய் சித்ரா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், மாவட்ட துணைச் செயலாளர் க.அன்பு ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிஐடியு தஞ்சை மாநகர ஆட்டோ சங்க நிர்வாகிகள் அ.ராஜா,  அ.செல்வம், ஆர்.காதர் உசேன், மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News