ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில், ஊத்தங்கரை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., தமிழ் செல்வம் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் உள்ள, உள் நோயாளிகளை நேரில் சந்தித்து நோயாளிகளிடம் மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்கின்றார்களா, தேவையான மருத்துவ வசதிகள் உள்ளதா என கேட்டறிந்தார்,மேலும் மாரம்பட்டி பகுதியில் நான்கு சிறுவர்களை தெருநாய்கள் கடித்ததில் காயமடைந்து மருத்துவமனையில் இருந்தவர்களிடம் உடல் நலம் குறித்து விசாரித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மதன்குமாரிடம், மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், மருத்துவ தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின்போது , அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி, நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம், மாரம்பட்டி பஞ்., தலைவர் பூமலர் ஜீவானந்தம், சிறுபான்மை பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் பேராஜான், ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமிதிருமால், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கண்ணன், சங்கர், சேகர்,அருண் ,கவி உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.