கல்வி என்பது கடமையல்ல, ஆயுதம் - திருச்சி சிவா

நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 372 மாணவ, மாணவிகளுக்கு திமுக மாநிலங்களவைக் குழு தலைவா் திருச்சி சிவா பட்டங்களை வழங்கினாா்.

Update: 2024-03-05 07:13 GMT

நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா திறந்தவெளி கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர் அ. இராஜா தலைமையேற்று நடத்தினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திமுக மாநிலங்களவை குழுத்தலைவர் திருச்சி சிவா, 372 பட்டதாரிகள் அனைவருக்கும் பட்டங்களை வழங்கி மாணவர்களுக்கு அறிவுரையாக "வாழ்கையில் லட்சியம் வேண்டும், அதை நோக்கிய முயற்சி வேண்டும். திட்டமிட்டபடி நடைபெறவில்லை எனில் துவண்டு விடாமல் நடந்ததை சரியாக பயன்படுத்தி வெற்றியின் விளிம்பை மட்டுமல்லாமல் அதன் உச்சியை தொட்டு விடலாம் என்று கூறினார். மேலும் அவர் மாணவர்களுக்கு, கல்வி என்பது கடமையல்ல, தகுதியான இடத்திற்கு அழைத்துசெல்லும் ஆயுதம். எனவே கல்வியால் நீங்களும் உயர்ந்து நாட்டையும் உயர்த்த வேண்டும்" என்று கூறினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலங்களவை உறுப்பினர் K.R.N.இராஜேஸ்குமார், வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ. ராமலிங்கம் கலந்து கொண்டனர். மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவியர் அனைவரும் கலந்துக்கொண்டனர். முன்னதாக பட்டம் பெற்ற பட்டதாரிகள் அனைவரும் எழுந்து நின்று உறுதிமொழியேற்றனர்.

Tags:    

Similar News