தேசிய ஹாக்கி போட்டி; சிவகங்கை மாணவிகள் தேர்வு
தேசிய ஹாக்கி போட்டிக்கு சிவகங்கை மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Update: 2023-12-29 12:29 GMT
தேசிய பள்ளி விளையாட்டு குழுமம் நடத்தும் தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டிக்கு சிவகங்கை புனித ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி மாணவிகள் தகுதி பெற்றுள்ளனர்.
14 வயதுக்குட்பட்ட பிரிவில் ஸ்ரீ சக்தி தேர்வு செய்யப்பட்டு மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான ஹாக்கிப்போட்டியில் தமிழக அணியில் விளையாட உள்ளார். 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஜஸ்டினா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கர்நாடகா மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் தமிழக அணியில் விளையாட உள்ளார். தேர்வு செய்யப்பட்ட மாணவிகளை பள்ளி முதல்வர் அருட்சகோதரி புஷ்பம், உடற்கல்வி ஆசிரியர் மோகன், ஒருங்கிணைந்த சிவகங்கை மாவட்ட ஹாக்கி கழகத்தின் செயலாளர் தியாக பூமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாராட்டினர்.