நாசரேத் பஜாரில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் சந்தி பஜாரில் நீர், மோர் பந்தலை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் கோடை வெயிலை சமாளிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் திமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறக்க உத்தரவிட்டார். இதன்பேரில் நாசரேத் சந்தி பஜாரில் அமைக்கப்பட்டிருந்த நீர், மோர் பந்தலை முன்னாள் பேரூராட்சித் தலைவர் மாமல்லன் தலைமையில் நாசரேத் நகர திமுக செயலாளர் ஜமீன் சாலமோன், முன்னாள் நகர திமுக செ லாளர் ரவி செல்வக்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் அருண் சாமுவேல் ஆகியோர் முன்னிலையில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்ச ருமான அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாநில திமுக வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரி சங்கர், தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் இராமஜெயம், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவீன்குமார், நாசரேத் நகர முன்னாள் அவை தலைவர் அருள்ராஜ், அவை தலைவர் கருத்தையா, இணைச் செயலாளர்கள் மாரிமுத்து, ஜேம்ஸ், நாசரேத் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் அதிசயமணி, சாமுவேல், திமுக மாவட்ட பிரதிநிதி அன்பு தங்கபாண்டியன், ஒன்றிய பிரதிநிதிகள் ஹாரீஸ்ரவி, ராமச்சந்திரன், ஞானராஜ், மாணிக்கராஜ், தேவதாஸ், வார்டு செயலாளர்கள் அப்பாத்துரை, ஜஸ்பர், ஜெரின், மாற்கு, பரந்தாமன், ஜெபகிருபை, மகளிர் அணி ஜூலியட், உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் பேரூராட்சி தலைவர் மாமல்லன் தலைமையில் நகர திமுக செயலாளர் ஜமீன் சாலமோன் முன்னாள் நகர திமுக செயலாளர் ரவி செல்வக்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.