கோணங்கிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசுபேருந்து வரவிற்காக, சாலை சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றது.
மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்திற்குட்பட்ட, குருக்கலாம்பாளையம், அம்மாபட்டி, ஜக்கம்மாதெரு, கோணங்கிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 600க்கும் அதிகமான குடும்பங்களில், 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில, 200க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளனர். இப்பகுதியில், இதுவரையில் பேருந்துவசதி இல்லை. குறிப்பாக, 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மல்லசமுத்திரம் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லவேண்டுமானால், 3கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காளிப்பட்டி பஸ்நிறுத்தத்திற்கு நடந்து சென்றுதான் மாணவர்கள் பஸ்ஏறி செல்லமுடியும் என்ற சூழலில் இருந்துவருகின்றனர். இதுசம்மந்தமாக, மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனுஅளித்தும் நடவடிக்கை இல்லை. கடந்த 12ம்தேதி, காளிப்படி பஸ்நிறுத்தத்தில் அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் உட்பட, 500க்கும் மேற்பட்டோர் திரண்டு மாபெரும் கவனஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், கடந்த 21ம்தேதி அப்பகுதியில் ஆய்வுசெய்த கலெக்டர் உமா பேருந்து வசதி செய்துதர ஏற்பாடு செய்தார். இதனைதொடர்ந்து தற்சமயம், அப்பகுதியில் உள்ள சாலைஓரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, குறுகலான பாதை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றது. இதனால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்சியடைந்துள்ளனர்.