
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மேற்கு மலைப்பகுதி வேலம்பட்டி பகுதியில் தட்டகரை வனச்சரகர் ராமலிங்கம் தலைமையில் வனத்துறையினர் நேற்று மதியம் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் இருந்து புகை வந்தது.உடனே அங்கு சென்று பார்த்தபோது ஒருவர் மரங்களுக்கு தீ வைத்து கொண்டிருந்தார். அவரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வேலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாதேவன் (வயது 38) என்பதும், விவசாயியான அவர் வனப்பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள மரங்களுக்கு தீ வைத்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.