புதுச்சேரி குண்டு சாலையை சேர்ந்தவர் ராஜகுரு (வயது 45). வேன் உரிமையாளர். இவர் கேரளாவில் இருந்து வேனில் மீன்களை ஏற்றி கொண்டு புதுச்சேரிக்கு சென்றார். இந்த வேனை உரிமையாளர் ராஜகுரு ஓட்டி வந்தார். டிரைவர் அசோக்ராஜ் அருகில் அமர்ந்திருந்தார். அப்போது கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே சாலையோரம் நின்று இருந்த லாரி மீது வேன் மோதியது. இதில் அசோக்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராஜகுரு படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.