பொதுமக்களுக்கான குறைதீர்ப்பு வாட்ஸ்அப் எண்கள் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான குறைதீர்ப்பு வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2023-12-21 15:31 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாட்ஸ்அப் எண்கள்: 93 840 56 221 மற்றும் 73 977 31 065 அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், Collector Thoothukudi என்ற முகநூல் பக்கத்திலும், @CollectorTuty என்ற X இணையதள பக்கத்திலும் பதிவிடலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.