வரும் 18 தேதி முதல் ஆட்சிமொழிச் சட்ட வார விழா ஆட்சியர் ச.உமா தகவல்

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வரும் 18 ந் தேதி முதல் ஆட்சிமொழிச் சட்ட வார விழா - ஆட்சியர் ச.உமா தகவல்

Update: 2023-12-13 11:43 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளை நினைவுகூறும் வகையில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 18.12.2023 முதல் 27.12.2023 வரை ஒரு வார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வார விழா நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் அறிஞர்கள் (ம) பள்ளி / கல்லூரி மாணவர்களுடன் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட விழிப்புணர்வு பேரணி 27.12.2023 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கணினித்தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம், தமிழில் வரைவுகள், குறிப்புகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், அரசாணைகள், ஆட்சிமொழி ஆய்வும் குறைகளைவும், மொழிப்பயிற்சி, மொழிபெயர்ப்பும் கலைச்சொல்லாக்கமும் குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்துதல், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைத்தல் தொடர்பான கூட்டம் நடத்துதல் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே ஆட்சிமொழிச்சட்டம் பற்றிய விழிப்புணர்வு பட்டிமன்றம் ஆகியன நடத்தப்பெறவுள்ளன. மேலும் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம் நடத்துதல் மற்றும் ஒட்டுவில்லைகளை ஒட்டியும், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் முதலியவற்றில் ஆட்சிமொழிச் சட்ட வாரத்திற்கான துண்டறிக்கை மற்றும் அரசாணை வழங்கியும் ஆட்சிமொழிச் சட்ட வார விழா நடைபெறவுள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News