முதியவர் விஷம் குடித்து தற்கொலை

துறையூர் அரசு மருத்துவமனை அருகே அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.;

Update: 2024-05-29 13:26 GMT
முதியவர் விஷம் குடித்து தற்கொலை

பைல் படம்

  • whatsapp icon

திருச்சி மாவட்டம் துறையூர் அரசு மருத்துவமனை அருகில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சுயநினைவின்றி கிடப்பதாக துறையூர் கிராம நிர்வாக அலுவலர் சாமிநாதனுக்கு தகவல் கிடைத்தது.தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரை பார்த்த போது அவர் சுயநினைவு இல்லாமல் இருந்த்து தெரியவந்தது.

பின்னர் பொதுமக்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என கூறினார் இதனையடுத்து உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்,எந்த ஊரைச் சேர்ந்தவர்,எதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News