ஈரோடு அருகே பவீடு இடிந்து விழுந்து ஒருவர் பலி
ஈரோடு அருகே புதிய கட்டுமான பணியின் போது வீடு இடிந்து விழுந்த்தில் ஒருவர் பலியானர்.;
இடிந்து விழுந்த வீடு
ஈரோடு மாவட்டம் ஆர்.என் புதூரில் அடுத்த ஜவுளி நகரில் ஆசாரி வேலை செய்துவரும் வெங்கடாசலபதி என்பவர் கடந்த ஓர் ஆண்டிற்கு முன்பு புதிதாக வீட்டு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாடியில் இரண்டு அறைகள் கட்டி அதற்கான பூச்சு வேலை நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் நாகேந்திரன், சிவராஜ் மற்றும் ஆனந்தன் ஆகிய மூவர் வழக்கம் போல பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திடீரென பாரம் தாங்காமல் கீழே விழுந்துள்ளது.
இதில் தர்மபுரி மாவட்டம் ஓசுரை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சிவராஜ் மற்றும் ஆனந்தன் காயங்களுடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வெங்கடாசலபதியிடம் சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.