மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், வளத்தி பகுதியில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-07-01 02:12 GMT
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், வளத்தி கிராமத்தை சோ்ந்த பலராமன் மகன் முரளி(49) என்பதுதெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகவில்லை. தனியாக வசித்து வந்த இவருக்கு மது அருந்தும் பழக்கமும், வயிற்று வலியும் இருந்து வந்ததாம். இந்நிலையில் அன்னமங்கலம் ஏரி அருகே விவசாய நிலத்தில் கொட்டகையில் முரளி இறந்து கிடந்தாா்.இது குறித்த புகாரின் பேரில் அவரது சடலத்தைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.