ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்

ஊராட்சி செயலர் பணியில் இருந்து தெய்வானையை சாத்தூர் பிடிஓ சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2024-06-28 15:43 GMT

ஊராட்சி செயலர்

சாத்தூரில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.79 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த ஊராட்சி செயலர் தெய்வானை நீதிமன்றத்தில் சரணடைந்து 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் ஊராட்சி செயலர் பணியில் இருந்து தெய்வானையை சாத்தூர் பிடிஓ சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் மோசடி வழக்கில் தெய்வானை மகள் தற்காலிக கணினி ஆப்ரேட்டர் ரேவதி மற்றும் அவரது உறவினர் ராம் மனோகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Tags:    

Similar News